உன் வார்த்தைகள் முழக்கு – நீ வடக்கிலே கிழக்கு: எம்.பி.யாக பதவியேற்ற வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

0
272
-Ads-
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இப்பதவிகளுக்கு அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 6 பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே தாக்கல் செய்ததால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் தமிழத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்  வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார்.
 
கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
 
வாழ்த்துக்கள் வைகோ…
 
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்
 
போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு 
 
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Info courtesy: dailythanthi
-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here