விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா?

0
306
-Ads-

சென்னை: விஷால், அனிஷா அல்லா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. 

விஷாலும், அனிஷாவும் ஒருவரையொருவர் பாராட்டி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டார்கள். அதை பார்த்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் நடக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இரண்டு பக்கமும் திருமண வேலையை துவங்கவில்லை. 

திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது என்று பேச்சு கிளம்பியுள்ளது. அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். 

விஷால் என்ற ஒருவர் அவர் வாழ்வில் வந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் கணக்கை மாற்றியுள்ளார் அனிஷா. அவரின் இந்த செயலால் திருமணம் நின்றுவிட்டது என்ற பேச்சு வலுப்பெற்றுள்ளது. 

திருமண விவகாரம் குறித்து இருவீட்டாரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. விஷால் அவர் பாட்டுக்கு படங்களில் பிசியாக உள்ளார். விஷால், அனிஷா இடையே காதல் வலுவாக இருந்த நிலையில் என்ன ஆனது என்று தெரியவில்லை. 

திருமணம் நின்றுவிட்டதா, அனிஷா ஏன் விஷாலின் புகைப்படங்களை எல்லாம் நீக்கினார் என்பதை அவர்கள் தெரிவித்தால் தான் உண்மை தெரிய வரும். 

-Ads-