தண்ணீர் பிரச்சனைகளில் அபாயகரமான கட்டத்தில் 7 நகரங்கள்!!

0
138
-Ads-

இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் தண்ணீர் பிரச்சனையில் தீவிரமான அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில் விரிஸ்க் மாப்லெகிராஃப்ட் எனும் நிறுவனம் ஆய்வு செய்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது, உலகளவில் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆபத்துள்ள நாடுகளில் இந்தியா 46-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இருபது மிகப்பெரிய நகரங்களில் டெல்லி, நாசிக், ஜெய்ப்பூர், அகமதாபாத், இந்தூர்,  பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட 11 நகரங்கள் தண்ணீர் பிரச்சனைகளில் அபாயத்தின் தீவிர கட்டத்தில் உள்ளதாகவும், இதில் 7 நகரங்கள் அதிக அபாயம் என்ற கட்டத்தில் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளது.

 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கம், மழை பெய்யாமை, தொடர் வறட்சி, குளம், குட்டை, ஏரி ஆறு போன்ற நீர்நிலைகளை மேம்படுத்தாமை உள்ளிட்டவை தான் தண்ணீர் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் என ஆய்வு செய்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

சென்னை மற்றும் டெல்லியில் தற்போதுள்ள மக்கள் தொகையை விட, 2035 ஆம் ஆண்டு சென்னையில் 47 சதவீதமும், டெல்லியில் 52 சதவீத மக்கள் தொகை அதிகரிக்கும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் உரிய முறையில் அதற்கேற்ப நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என மாப்லெகிராஃப்ட் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Info courtesy: seithipunal

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here